INDIAN 2 ~இந்தியன் தாத்தா சமூக பொறுப்பில்லாமல் சமூகத்தில் நடக்கின்ற ஊழலை தடுக்கிறார்..
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நேற்று பார்த்தேன். வழக்கம் போலவே இயக்குநர் சங்கர் படங்களில் தலித் மக்களை இழிவாக சித்தரிப்பது போலவே, இப்படத்திலும் மிக மோசமாக சித்தரித்திருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் ஜெகன் முதன்மை தூய்மை பணியாளரிடம் ”செய்ற வேலைக்கு தானே சம்பளம் வாங்குறீங்க சரியா பன்னுங்க” என்று பேசும் வசனம் மிகவும் சமூக பொறுப்பற்றதாகவும் , எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் இப்படத்தில் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கும் சமூக ஊடகவியாளர். இந்த வசனத்தை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களிலும் இது போன்ற சமூக பொறுப்பற்ற வசனங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் பறை அடிப்பவர்களிடம் ”காசு வாங்குறீங்கள வேகமா அடிங்க” என்ற வசனம் வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தலித் மக்கள் செய்யும் தொழிலை ஏன் இவ்வளவு இழிவாக பேசுகிறார்கள்? இதுவும் மிக கொடுமையான தீண்டாமை தான். அடுத்து இந்தியன் 2-வில் தலித் சமூக மாணவன் தன் படிப்பிற்காக வாங்குன க...