Leo movie review
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தின் ஆக்ஷன் காட்சிகள், விஜய்யின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், சிலர் படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றை விமர்சனம் செய்கின்றனர்.
படத்தின் கதை இமாச்சல பிரதேசத்தின் தியோக் பகுதியில், மனைவி சத்யா (த்ரிஷா), மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்), மகள் மதி (யல்) ஆகியோருடன் வசித்து வருகிறார். பார்த்திபன் (விஜய்). கஃபே சாப் நடத்தி வருகிறார். படம் தொடங்கிய முதல் 10 நிமிடம் பார்த்திபன் ஹைனாவை அடக்கும் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காஃபே சாப்பில் பார்த்திபன் மற்றும் போதை கடத்தல் கும்பல் இடையே நடக்கும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது.இதன் பிறகு, அவர் பலரின் கண்ணை கட்டுகிறார்.இதனால் வரும் விளைவு தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் விஜய்யின் நடிப்பு அசத்தலாக உள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அவர் பட்டையைக் கிளப்பியுள்ளார். திரிஷாவின் நடிப்பும் பாராட்டத்தக்கது.சேன்டியின் நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது.லோகேஷ் கனகராஜின் இயக்கம் படத்தின் பலம். ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பு. பிண்ணனி இசை சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
ஆனால், படத்தின் கதை, திரைக்கதை ஆகியவற்றில் சில குறைபாடுகள் உள்ளன. படத்தின் முதல் பாதியில் கதை விறுவிறுப்பாக நகர்கிறது என்றாலும் இரண்டாம் பாதியில் பல காட்சிகள் தேவையில்லாமல் நீண்டுள்ளன. க்ளைமாக்ஸ் காட்சி சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில், 'லியோ' படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து. ஆக்ஷன் ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும். ஆனால், கதை, திரைக்கதை ஆகியவற்றில் சில குறைபாடுகள் உள்ளன.
Comments
Post a Comment