மாமன்னன்

சமீபத்தில் மாரிசெல்வராஜ் தேவர் மகன் படத்தை பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. தேவர் மகன் குறித்து அவர் பேசியது முழுக்க முழுக்க சரிதான். தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது மற்றும் சாதி உணர்வை மேலும் தூண்டியது. தேவர் மகன் படத்தை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்துக்கள் பெரும்பாலும் "அந்த ஜாதிக்குள் இருக்கும் முரண்களை பற்றி அந்த படம் பேசுகிறது இதில் மற்ற ஜாதியை இழிவு படுத்தவில்லை" என்பதுதான். ஆனால் உண்மையில் அந்தப் படத்தில் ஒரு ஒரு வசனமும் பாடல்களும் சுயசாதி பெருமையே பேசுகிறது. சுயசாதி பெருமை எப்போதும் சாதி உணர்வை தான் மேம்படுத்தும். சாதி பெருமை பேசும் போதே தாங்கள் மேன்மையானவர்கள் என்று எண்ணம் தோன்றிவிடுகிறது. தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கும் ஹீரோவின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவும் மண்வாசனை படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் இயக்குனர்களும் நடிகர்களும் பெரும்பான்மையான சமூகத்தை அடையாளப்படுத்திய படம் இயக்குவதும்  கதாபாத்திரத்தை தாமாக முன்வந்து ஏற்று நடிப்பதும் உண்டு. இது போல தான் நடிகர் கமலஹாசன் அப்போது படங்களை தேர்வு செய்தார் . தேவர் மகன் படத்திற்கு பிறகு சண்டியர் என்று படத்துக்கு பெயர் வைத்தார் ஆனால் அப்போது தேவர் மகன் தென் மாவட்டங்களில் ஏற்படுத்திய ஜாதி கலவரத்தால் பிறகு விருமாண்டி என்று படத்துக்கு பெயர் மாற்றப்பட்டது. இன்று வரை "போற்றிப் பாடடி பொன்னே" என்ற பாடல் மொபைல் ரிங்டோன் ஆகவும் திருவிழாவிலும் இசைக்கப்படுகின்றது மற்றும் ஜாதி கலவரங்களையும் தூண்டுகிறது. தமிழ் சினிமாவில் இன்று வரை தலித் மக்களை ரவுடியாகவும் வில்லனாகவும் திருடனாகவும் காமெடியனாகவும் சித்தரிக்கப்பட்டு இயக்கப்படுகின்ற  நிலையில் தலித் மக்களின் வலியையும் உணர்வயும் உரிமையையும் பேசும் படங்கள் மிக மிக அவசியமானவை வரவேற்கக் கூடியவை.  மாரிசெல்வராஜ் தனக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையும் இவ்வளவு பெரிய மேடையில் கமலஹாசன் முன் வெளிப்படுத்துவதற்கு 30 ஆண்டுகள் ஆயின. இது புரியாமல் தங்களை பகுத்தறிவாதிகள் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டு மிகவும் பின்தங்கிய சிந்தனையுடையவே இருக்கிறார்கள் . இது போன்ற தலித் மக்களின் அடிப்படை உரிமை பேசுவதற்கும் சமூகத்தில் சமூக நீதி சமத்துவம் உண்டாக்குவதற்கும்  "இசக்கி மாமன்னனாக ஆகத்தானே"வேண்டும் . 
                                        - ஜெ. அருண்

Comments

Popular posts from this blog

INDIAN 2 ~இந்தியன் தாத்தா சமூக பொறுப்பில்லாமல் சமூகத்தில் நடக்கின்ற ஊழலை தடுக்கிறார்..

My Father Baliah A book review

இயக்குநர்களுக்காக மாறிய சினிமா