ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடா இல்லை சாதி பெருமிதமா?
2017 ஜல்லிக்கட்டு போராட்டம் அப்போ எடுத்த புகைப்படம் அந்த நேரத்துல school lam லீவ் போட்டு ரயில நிப்பாட்டி மேல ஏறி ரொம்ப தீவிரமா போராட்டத்துல ஃபயர் விட்டுடு இருந்தன். தமிழன்டா ஜல்லிக்கட்டு கலாச்சாரமுனு ,ஆன போக போக தான் தெரியுது ஜல்லிக்கட்டு போட்டில தீண்டாமை தீவிரமா கடைப்பிடிச்சுட்டு வராங்கனு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டில தலித்துகள் கலந்துகுராங்க ஏன்னா அது மாநில அரசு நடத்துறதுனால அப்பவும் அங்க முழுமையா வாய்ப்பு கிடைக்கல தீண்டாமை தான் நிலவுது. இன்னும் மதுரையை சுத்தி இருக்க பக்கலாம் ரொம்ப மோசம் அங்க இருக்க ஆதிக்க சாதி மக்கள் தான் போட்டிய ஏற்பாடு செய்வாங்க அவங்க மட்டும் தான் கலந்துப்பாங்க. தலித் இளைஞர் போட்டி ல கலந்துக முடியாது. இதனால நிறைய சாதி சண்டைங்கள் உயிர் இழப்புகள் ஏற்பட்டிற்கு இந்த விளையாட்டு சாதி பெருமை, தீண்டாமை , சமத்துவமின்மை தான் கடைப்பிடிச்சுடு வருது. இது முழுமையா தூய தமிழர் பண்பாடுனு சொல்ல முடியாது ஏன்னா அதன் தற்போதைய வடிவத்தில், இந்த விளையாட்டு 16 ஆம் நூற்றாண்டில தெலுங்கு பேசும் நாயக்கர் காலத்தில தோன்றியது இதற்கும் தமிழ்ச் சங்க காலத்தின் "ஏறு தழுவுதலுக்கும் [காளையைக் கட்டிப்பிடிக்கும்]" எந்தத் தொடர்பும் இல்லை.
- ஜெ.அருண்
Source : BBC , Times of India
Comments
Post a Comment