INDIAN 2 ~இந்தியன் தாத்தா சமூக பொறுப்பில்லாமல் சமூகத்தில் நடக்கின்ற ஊழலை தடுக்கிறார்..
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நேற்று பார்த்தேன். வழக்கம் போலவே இயக்குநர் சங்கர் படங்களில் தலித் மக்களை இழிவாக சித்தரிப்பது போலவே, இப்படத்திலும் மிக மோசமாக சித்தரித்திருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் ஜெகன் முதன்மை தூய்மை பணியாளரிடம் ”செய்ற வேலைக்கு தானே சம்பளம் வாங்குறீங்க சரியா பன்னுங்க” என்று பேசும் வசனம் மிகவும் சமூக பொறுப்பற்றதாகவும் , எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் இப்படத்தில் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கும் சமூக ஊடகவியாளர். இந்த வசனத்தை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களிலும் இது போன்ற சமூக பொறுப்பற்ற வசனங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் பறை அடிப்பவர்களிடம் ”காசு வாங்குறீங்கள வேகமா அடிங்க” என்ற வசனம் வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தலித் மக்கள் செய்யும் தொழிலை ஏன் இவ்வளவு இழிவாக பேசுகிறார்கள்? இதுவும் மிக கொடுமையான தீண்டாமை தான். அடுத்து இந்தியன் 2-வில் தலித் சமூக மாணவன் தன் படிப்பிற்காக வாங்குன கடனை கட்ட முடியாமல், வங்கி ஊழியர் மாணவன் மீது கடுமையாக நடந்து கொள்கிறார். அவமானம் தாங்கமுடியாமல் “போங்கடா போய் புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடானு சொன்னிங்க இப்ப என்ன பன்றது” என்று கூறிவிட்டு தற்கொலை செய்து கொள்வார். ஏன் இத்தகைய தாழ்வு மனப்பான்மையை இந்த மக்களுக்கு தமிழ் சினிமா பாரபட்சம் இல்லாமல் வழங்குகிறது?. பிறகு நடிகர் கமல் பேசும் வசனம் மேலும் மோசமாக உள்ளது ”கழிப்பறை செவுத்துல கிறுக்குனவன்லாம் இன்னிக்கி FACEBOOK -ல கிறுக்க ஆராமிச்சிடாங்க” என்ற வசனத்தை பேசியிருப்பார். இது எவ்வளவு மோசமான வசனம் என்று அறியாமல் எப்படி MNM கட்சித் தலைவர் பேசியிருப்பார்?.. இந்தியன் தாத்தா சமூக பொறுப்பில்லாமல் சமூகத்தில் நடக்கின்ற ஊழலை தடுக்கிறார்.. திரை விமர்சனம் : தாத்தா வந்துட்டாறு படம் பார்த்தவங்கள தான் கதரவிட்டாறு.
- ஜெ. அருண் ( views are political not personal)
Comments
Post a Comment