இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நேற்று பார்த்தேன். வழக்கம் போலவே இயக்குநர் சங்கர் படங்களில் தலித் மக்களை இழிவாக சித்தரிப்பது போலவே, இப்படத்திலும் மிக மோசமாக சித்தரித்திருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் ஜெகன் முதன்மை தூய்மை பணியாளரிடம் ”செய்ற வேலைக்கு தானே சம்பளம் வாங்குறீங்க சரியா பன்னுங்க” என்று பேசும் வசனம் மிகவும் சமூக பொறுப்பற்றதாகவும் , எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் இப்படத்தில் மக்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கும் சமூக ஊடகவியாளர். இந்த வசனத்தை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களிலும் இது போன்ற சமூக பொறுப்பற்ற வசனங்கள் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது. நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் பறை அடிப்பவர்களிடம் ”காசு வாங்குறீங்கள வேகமா அடிங்க” என்ற வசனம் வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தலித் மக்கள் செய்யும் தொழிலை ஏன் இவ்வளவு இழிவாக பேசுகிறார்கள்? இதுவும் மிக கொடுமையான தீண்டாமை தான். அடுத்து இந்தியன் 2-வில் தலித் சமூக மாணவன் தன் படிப்பிற்காக வாங்குன க...
The book ‘My Father Baliah’ talks about three generations of people from a repressed family. It details how education and accessibility transformed their lives, breaking the shackles of caste. The author Mr.Satyanarayana traverses through his family history to portray their growth. His father Sri. Baliah who has faced the real brunt of discrimination, is the protagonist of this family narrative. At a very young age, he gets a clear idea that only education can help his future generations to come out of this misery. The turning point in his life comes with him getting a job with the Indian Railways. When the British introduced railways across the country, it opened up a lot of jobs like boxmen.The job entailed carrying the box (with the personal belongings) of the guard, from one train to another or from train to home and vice versa. For Baliah’s family, his job in railways gave two major benefits. The first one being staying in railway employees quarters, where the caste b...
இயக்குநர்களுக்காக மாறிய சினிமா முன்னுரை: வேறெந்த கலைக்கும் இல்லாத ஒரு மாபெரும் பெருமை சினிமாவிற்கு இருக்கிறது. சாதி பாகுபாடு இன்றி எல்லா சாதி மக்களையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்த கர்வமிகு பெருமை அது. எல்லோரையும் ஒன்றாக கூட செய்ததால் சினிமா ஒரு புரட்சிகரமான கலையாகவே இங்கு இருக்கிறது. சினிமா என்றாலே மென்(men)ஹீரோயிசம் தான் என்ற நிலைமை மாறி தற்போதைய சூழலில் இயக்குநர்களுக்கென்று தனி ரசிகர் படை உருவாகி கொண்டு இருக்கிறது. இதனைப் பற்றிய ஆய்வார்ந்த தகவல்களை இக்கட்டுரையில் காண்போம். ஹீரோ வழிபாடு( Hero workship) உலக சினிமா முதல் தமிழ் சினிமா வரை மக்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களால் ஈர்க்கப்பட்டு உளவியல் ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்தவை.உதாரணமாக சக்திமானின் ஹீரோயிசத்தால் ஈர்க்கப்பட்டு சிறுவன் மாடியில் இருந்து சக்திமான் காப்பாற்றுவார் எனக் கூறி கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டது நாம் அனைவரும் அறிந்தவை. தமிழ் சினிமா எடுத்துக் கொண்டால் அந்த காலம் ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் என ஆரம்பித்து தற்போது விஜய் ,அஜித் வரை அவர்களின் ரசிகர்கள் கண்மூடித்தனமா...
Comments
Post a Comment